இறுதி தீர்மானம் எட்டப்படாமல் முடிந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்

Report Print Ajith Ajith in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டம் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் தலைவர்களுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும், சட்டமா அதிபரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில் இந்த கலந்துரையாடல் நிறைவுபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை மீண்டும் கூடி இந்த விடயம் தொடர்பில் ஆராய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.