அரசாங்கத்தில் இருந்தும் விலக தயார்! எச்சரிக்கும் லக்ஷ்மன் யாப்பா

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியை தரம் தாழ்த்த சிலர் முயற்சிப்பார்கள் எனில் அதற்கு எதிராக குரல் கொடுக்க தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக செயற்படும் போது அதனை தரம் தாழ்த்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பாடுகளை முன்னெடுப்பது பாரதூரமான பிரச்சினையாகும்.

இதேவேளை தேசிய அரசாங்கத்தை பாதுகாகக் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.