வரவு செலவுத்திட்டம் பற்றி கூறும் நிதியமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை பண்டைய காலத்தில் இருந்த பொருளதார நிலைமையை ஏற்படுத்துவதற்காகவே இம்முறை வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு விவசாய நாடு என சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தவறான கருத்தை இதன் மூலம் திருத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய வருமான வரி சட்டம், வரி வருமான துறையில் அரசியல் தலையீடுகளை தடுக்கும்.

துரித அபிவிருத்திக்கு இது உதவியாக இருக்கும்.புதிய சட்டத்தை கொண்டு வந்த உடன் அமுல்படுத்தவிருந்தோம்.

எனினும் மக்களுக்கு புதிய வருமான வரி சட்டம் குறித்து தெளிவுப்படுத்தவும் பழக்கப்படுத்தி கொள்ளவும் காலஅவகாசத்தை வழங்க வேண்டும் என்பதால் அதனை ஒத்திவைத்தோம்.

இதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமுலுக்கு வரும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.