கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்த முடியாது

Report Print Rakesh in அரசியல்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ள நிலையில் இதனை யாராலும் பிளவுபடுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பின் ஒற்றுமை - அதன் பலம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படும். இம்முறையும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் நாம் கொடிகட்டிப் பறப்போம்.

நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். அதனை வென்றெடுக்கும் வரை எமது ஜனநாயகப் போராட்டம் தொடரும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவால் அரசியலமைப்பு நிர்ணய சபையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இடைக்கால அறிக்கையே.

இது இறுதி வரைபு அல்ல. இறுதி வரைபு வரும்வரை அதற்கான ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம்.

புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபு தமிழ்பேசும் மக்களுக்கு உகந்ததாக இல்லை என்றால் அந்த இறுதி வரைபை நாம் அடியோடு நிராகரிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.