பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் தாமதமாகும் அறிகுறி

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை துரிதமாக விவாதத்திற்கு எடுக்க முடியாது போகும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்திற்கு பின்னரே நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைகளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தனர்.

எனினும் வரவு, செலவுத்திட்டம் தொடர்பான குழுநிலை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரவு, செலவுத்திட்டம் தொடர்பான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.