குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம்: ஒஸ்டின் பெர்னாண்டோ

Report Print Steephen Steephen in அரசியல்

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலஞ்சம் அல்லது மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் போது பல்வேறு முக்கிய பிரிவுகளில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக விசாரணை அதிகாரிகளின் கடமைகளுக்கு சவால்களும் கஷ்டங்களும் ஏற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குற்ற விசாரணைகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தெற்காசிய பிராந்திய பிரிவை ஏற்படுத்துவது சம்பந்தமாக சிரேஷ்ட அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குற்ற விசாரணை அதிகாரிகளின் சேவை சமூகத்திற்கு அத்தியவசியமான சேவை. அது மாத்திரமல்லாது குற்றங்கள், ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு இது மிகவும் முக்கியமான சேவையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய நாடுகள் ஊடாக நடக்கும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்கான இரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்வதை இலகுவாக்கும் நோக்கில் இந்த பிராந்திய பிரிவை ஏற்படுத்தும் முறையை உருவாக்குவது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.