பயன்படுத்தப்படாத கட்டடத்திற்கு மாதாந்தம் 2 கோடி பத்து இலட்சம் ரூபா வாடகை!

Report Print Aasim in அரசியல்
பயன்படுத்தப்படாத கட்டடத்திற்கு மாதாந்தம் 2 கோடி பத்து இலட்சம் ரூபா வாடகை!
260Shares

துமிந்த திசாநாயக்கவின் அமைச்சு அலுவலகத்துக்காக பெறப்பட்டு, பயன்படுத்தப்படாத கட்டடத்துக்கு மாதாந்தம் இரண்டு கோடி வரையில் வாடகை செலுத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், விவசாய சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் அமைச்சு அலுவலகமாக பயன்படுத்துவதற்கென பிரபல சிங்கள நடிகை ஒருவருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளது.

எனினும் இன்றுவரை குறித்த கட்டடம் அமைச்சு அலுவலமாக பயன்படுத்தப்படாத போதும் மாதாந்தம் 2 கோடி பத்து இலட்சம் ரூபா வாடகையாக குறித்த நடிகைக்கு செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் காரணமாக மேலதிக விசாரணைகளுக்காக அமைச்சின் சார்பிலான வாடகை ஒப்பந்தத்தை இலஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு எடுத்துச் சென்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.