அடுத்த ஜனாதிபதி குறித்த கருத்து கணிப்பு செய்தி பொய்யானது!

Report Print Kamel Kamel in அரசியல்

2020ம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு செய்தி பொய்யானது என கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் நேற்றைய தினம் பிரசுரமான ஞாயிறு சிங்கள பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் யார் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும், தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழக தொடர்பாடல் பீடம் எவ்வித கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வமாக இவ்வாறான எந்தவொரு கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என தொடர்பாடல் பீடம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பு என்ற அடிப்படையில் செய்தி வெளியிடுவதன் மூலம் வாசகர்களை பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எந்தவொரு தனிப்பட்ட நபரும் கருத்துக் கணிப்புக்களை நடாத்தி அதனை பிரசுரிக்க அனுமதியுண்டு என்ற போதிலும் அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.