கருணா எடுத்துள்ள முடிவும் அசைக்கமுடியாத நம்பிக்கையும்

Report Print Shalini in அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும், எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை தாம் எடுக்கவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுயேட்சையாகவே எதிர்கொள்ளவுள்ளோம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து போட்டியிடும் சிறுபான்மைக் கட்சிகளில் எமது கட்சி இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இதுவரை பதிவு செய்யப்படாத காரணத்தினால், இம்முறை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் எமது பலத்தை நிரூபிக்க நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் மக்கள் எங்களை நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.