அரசாங்கம் தேர்தல் சட்டத்தை மீறி தொழில் வாய்ப்புக்களை வழங்குகிறது: நாமல்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் தேர்தல் சட்டத்தை மீறி கொழும்பு துறைமுகத்தில் மூவாயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்க நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில்புரியும் 438 பேரை பணிகளில் இருந்து நீக்க துறைமுக அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் தொழில் சட்டம் மீறப்பட்டுள்ளது. தொழில் அமைச்சு ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ள போதிலும் அவரது உத்தரவை கவனத்தில் கொள்ளாது துறைமுக அதிகார சபை தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி தேர்தல் சட்டத்தை மீறி வருவதுடன் தொழில் சட்டத்தையும் மீறி வருகின்றனர்.

இது சம்பந்தமாக தேர்தல் ஆணையாளர் தலையிட வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு பலவற்றை முன்வைத்து, பலவந்தமாகவேனும் தேர்தலில் வெல்ல தயாராகி வருகிறது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சிலர் தொழில் இழப்பது தொடர்பான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கவேண்டும் என துறைமுக சுயாதீன தொழிற்சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவகே குற்றம் சுமத்தியுள்ளார்.