தமிழரசுக்கட்சியின் கல்முனை மாநகரசபைக்கான வேட்பாளர்கள் தெரிவு

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் அனைவரும் ஒன்றுகூடி மூன்று பேரை வேட்பாளர்களாக முன்மொழிந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆண்கள் சார்பில் வேட்பாளராக தி.இராசரெத்தினம், மற்றும் பெண்கள் சார்பில் சு.பாக்கியவதி, பா.தமிழ்செல்வி ஆகியோரின் பெயர்கள் ஏகமனதாக சபையோரால் முன்மொழியப்பட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.