தேசிய சுதந்திர முன்னணி சுதந்திரக்கட்சியுடன் இணைய வேண்டும்!

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டாயம் இந்த இணைவு நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேவையான இடங்களில் தான் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் நிலைப்பாடு வேறானது. ஒருவர் தனது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அமைய பல்வேறு கொள்கைகளை கொண்டிருக்கும் உரிமை உள்ளது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் வெற்றி முக்கியமல்ல. நாட்டின் வெற்றி குறித்து சிந்திக்க வேண்டும்.

நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைய வேண்டும்.

பிரித்தல், கழித்தல் அரசியல் தொடர்பில் இரண்டு விடயங்கள் அல்ல. கூட்டல் பெருக்கலே அரசியலுக்கு ஏதுவானது.

இந்த சரளமான விடயங்கள் எவருக்கும் புரியும்.நாட்டுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய வழி எது என்பது குறித்து அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும் எனவும் வீரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.