அரசாங்க வருமானம் தொடர்பில் ஜனாதிபதி காட்டம்

Report Print Ajith Ajith in அரசியல்

சிகரட், சாராயம் மற்றும் போதைப் பொருடகள் மூலம் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள ஒருபோதும் எதிர்பார்க்கக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பியர், சாராயம் மற்றும் சிகரட் போன்றவற்றின் பாவனைக்கு சலுகை வழங்குவது பொருத்தமானதல்ல.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்காக சிகரட், சாராயம் மற்றும் போதைப்பொருள் மூலம் அதை செய்ய ஒருபோதும் எதிர்பார்க்கக்கூடாது என்ற தெளிவான கொள்கையை நடைமுறைப்படுத்துவது முக்கியமாகும்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து சிகரட் கொண்டு வரப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.