வளிமண்டலவியல் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படும்

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் நவீன மயப்படுத்தப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம்(04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான துல்லியமான தகவல்களை வழங்குவதற்கும், ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிடுவதற்கும் கூடிய வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் நவீன மயப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. எனினும், உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்படவில்லை.

சரியான துல்லியமான தகவல்களை வழங்க நவீன தொழில்நுட்பங்களை திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இதன் ஊடாக நீண்ட கால அடிப்படையில் வானிலை எதிர்வு கூறல்களை வெளியிட முடியும்.

இதேவேளை, மண்சரிவு தொடர்பில் தானியக்க அடிப்படையில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.