அரிசியைக் கொண்டு மதுபானம் தயாரிப்பதற்கு மகிந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது

Report Print Kamel Kamel in அரசியல்

அரிசியைக் கொண்டு மதுபானம் தயாரிப்பதற்கு ராஜபக்சக்களே அனுமதி வழங்கியதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசியைக் கொண்டு மதுபான வகைகள் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

இலங்கையில் ஸ்பிரிட் வகைகளை உற்பத்தி செய்யும் எந்தவொரு உற்பத்தி நிறுவனத்திற்கும் அரிசியைக் கொண்டு உற்பத்தி செய்யுமாறு அனுமதி வழங்கப்படவில்லை.

இலங்கையில் 14 மதுபான உற்பத்திசாலைகள் காணப்படுகின்றன. இவற்றில் கள்ளு, பனை மரக் கள்ளு, கோதுமை மற்றும் பழங்கள் உள்ளிட்டனவற்றை பயன்படுத்தி ஸ்பிரிட் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டில் ஒரு மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு மட்டும் அரிசியைக் கொண்டு மதுபானம் உற்பத்தி செய் அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், தற்போது அந்த நிறுவனத்திற்கு அரிசிக்கு பதிலாக சோளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன கூறுவது போல் அரிசியைக் கொண்டு மதுபானம் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி அமைச்சு ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.