தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பின்னாள் அணி திரள வேண்டும்

Report Print Kumar in அரசியல்

கிழக்கில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பின்னால், தமிழர்கள் அணி திரளவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் இன்று செலுத்தியுள்ளது.

அந்தவகையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன், கட்சியின் பிரதித்தலைவர் க.யோகவேள், மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சகிதம் சென்று கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

அந்தக்கட்சியுடன் சேரப்போகின்றோம், இந்தக்கட்சியுடன் சேரப்போகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அனைத்தையும் தாண்டி இம்முறை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தங்களது பகுதிகளை தாங்களே ஆளும் அதிகாரத்தை கொண்டதாக இருக்கும்.

தமிழர்களின் ஆணையை பெற்றவர்கள் தமிழர்களின் இருப்பினை தாரைவார்த்து கொடுத்துள்ளனர். கிழக்கில் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பின்னால் தமிழர்கள் அணி திரளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.