தமிழ் மொழிமூலப் பாடசாலைகளை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.எம்.மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ் மொழிமூலப் பாடசாலைகளை முன்னேற்ற மாகாண கல்வியமைச்சு மேலும் செயற்பாட்டு ரீதியாக பணியாற்ற வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் பாடசாலையில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பாக மேல், மத்திய, வடமேல் மாகாணங்களில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் நன்றாக கல்வி கற்று வருகின்றனர்.

பௌதீக வளங்கள் மற்றும் ஆசிரியர்கள் குறைவின்றி இருப்பதே இதற்கு காரணம்.

எனினும் மேல் மாகாணத்தில் அமைச்சர்கள் வெறும் கதைகளை பேசிய போதிலும் இங்குள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களையோ, ஆசிரியர் நியமனங்களையோ வழங்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

காணொளி - ஆகாஷ்