இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ள நம்பிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அமுலில் இல்லை.

இந்நிலையில், புதிய அரசியல் அமைப்பில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இது அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

எவ்வாறாயினும், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும்” என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.