தமிழரசுக் கட்சியுடன் போட்டி? தீர்மானம் எடுக்க கூடுகிறது புளொட்

Report Print Ajith Ajith in அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் மத்திய குழுவைக் கூட்டியே தமது முடிவை அறிவிக்க உள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல.எவ்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்பன தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

இந்த நிலையில், அமைப்பின் மத்திய குழு கூட்டத்தை நடத்தி, தமது கட்சியின் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என புளொட் தலைவர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.