ரஜரட்டை மன்னர், அரிசியை இறக்குமதி செய்கிறார்: நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

ரஜரட்டையைச் சேர்ந்த மன்னர் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள். சகல அமைச்சர்களும் மகிந்த ராஜபக்சவை திட்டியபடியே தமது உரைகளை தொடங்குகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் கடந்த அரசாங்கத்தின் தவறுகளை கூறியே பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் அவர்கள் அங்கம் வகிக்காதவர்கள் போல் பேசுகின்றனர். எனினும் தம்முடன் இருப்பவர்களை திட்டியே பேச்சை முடிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினரும் மகிந்த ராஜபக்சவை திட்டியே பேச்சை ஆரம்பிக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களை திட்டி பேச்சை முடிக்கின்றனர்.

எங்கே கொள்கை?. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வேலைத்திட்டங்கள் எங்கே?. பிரதமர், ஜனாதிபதியை திட்டுகிறார். ஜனாதிபதி பிரதமரை திட்டுகிறார்.

பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர். பிணை முறிப்பத்திர விவகாரத்தின் புதிய திருடர்களை பிடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.

நாட்டின் இரண்டு தலைவர்களும் இழுப்பறிப்பட்டு வருகின்றனர். சொல்வதற்கு வெட்கம், ரஜரட்டை பிரதேசத்தில் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசியில் சோறு சாப்பிடுகின்றனர்.

ரஜரட்டையின் மன்னர் வெளிநாட்டு அரிசி. அவருக்கு சேறுபூசி பிரயோசனம் இல்லை. அவருக்கு தேவையான வேலைகளை செய்துக்கொள்கிறார்.

அரசாங்கத்தில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் இரண்டு தலைவர்களும் பொறுப்புக் கூறவேண்டும். கொள்கையுடன் அரசியலில் ஈடுபட்டால் நாடு அபிவிருத்தியடையும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.