அலிசாஹிர் மௌலானாவுக்கு மிரட்டல் விடுத்த நசீர் அஹமட்? பகீர் காணொலி

Report Print Dias Dias in அரசியல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தம்மீது வீண் பலி சுமத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நா.உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் தொலைபேசி உரையாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தன்னை அரசியலில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும் என நசீர் அஹமட் நினைப்பதாக அலிசாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூரில் கடந்த சில நாட்களாக தமக்கு எதிரான பிரச்சாரங்கள் ஹாபிஸ் நசீர் அஹமட் தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டத்தின் போது ஏற்பட்ட சிறு பிரச்சினையால் தாம் பேசும் போது “வாயைப் பொத்துடா ராஸ்கல்” என தெரிவித்த நசீர் அஹமட், அவருடைய காலணியை கலற்றி எடுத்ததாகவும், இதனால் அனைவரும் அவரை பிடித்துக்கொண்டதுடன், சற்று பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் என்னை சமாளித்ததுடன், மன்னிப்பும் கோரினார்.

ஆனால் தன்னை அடித்தாலும் பரவாயில்லை, அவர் தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அது தன்னை கடுமையாக பாதித்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கூறும் தொலைபேசி உரையாடல் வைரலாக பரவி வருகின்றது.