சுதந்திரக்கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 5 பேர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி நியமனக் கடிதங்களை கையளித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக சமிந்த குமார திஸாநாயக்க, சட்டத்தரணி உபாலி மோஹெட்டி, என்.டி. தயானந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட அமைப்பாளராக டி.என்.டி.நுகவெல நியமிக்கப்பட்டுள்ளார். திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட அமைப்பாளராக குணரத்ன மகேந்திர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.