ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு: மைத்திரிபால சிறிசேன

Report Print Steephen Steephen in அரசியல்

நாளைய தினத்துடன் முடிவடையவுள்ள பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

அறிக்கையை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு பதவிக்காலத்தை ஜனாதிபதி நீடித்துள்ளார்.