சீனாவின் ஆதிக்கத்துக்கு தடைபோடும் முயற்சியில் இந்தியா!

Report Print Ajith Ajith in அரசியல்

சீனாவின் ஆதிக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தியா மத்தள விமான நிலையத்தை வாங்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம், தி இன்டர்ப்ரட்டர் என்ற சர்வதேச அரசியல் ஆய்வுத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்வரும் சனிக்கிழமை சீனாவிடம் கையளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மத்தள விமான நிலையத்தை கையேற்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விமான நிலையம், உலகின் வெறுமையான விமான நிலையமாக பார்க்கப்படுவதாக குறித்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை சீனா பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், இதன் ஊடாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்று இந்தியா கருதுகிறது.

இதனை தடுக்கும் நோக்கிலேயே குறித்த விமான நிலையத்தை வாங்கும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுவருவதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.