மற்றுமொரு கடற்படை கப்பலை இலங்கைக்கு வழங்குகிறது அமெரிக்கா!

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் மற்றும் ஒரு கடற்படை கப்பலை இலங்கைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, இலங்கை இந்து பசுபிக் பங்காளித்துவத்தை மேம்படுத்தும் வகையில் இது வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வளர்ச்சியை குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றும், அமெரிக்காவின் அரசியல்துறை பிரதிச்செயலர் தோமஸ் ஏ செனொன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த அவர், அமெரிக்காவின் இரண்டாவது கடற்படை கப்பல் இலங்கைக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்திருந்தார்.

இந்த கப்பலின் மூலம் இலங்கை தமது முக்கிய பொருளாதார கடல்வலயத்தை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.