ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க அமைச்சரவை பச்சைக்கொடி

Report Print Ajith Ajith in அரசியல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான மூலோபாய சட்டத்தின் சரத்துகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இன்றைய தினம் இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும், சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் கூட்டு உடன்படிக்கை கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய, ஹம்பாந்தோட்டை துறைமுகம், எதிர்வரும் சனிக்கிழமை அந்த நிறுவனத்திடம் கையளிக்கப்பட உள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் தலைமையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers