தனித்துக் களமிறங்கிய இ.தொ.கா! நுவரெலியா, கொழும்பில் சேவல் சின்னம்

Report Print Rakesh in அரசியல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புகளையடுத்தே நேற்றைய தினம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இறுதி முடிவை எடுத்துள்ளது.

இந்த நிலையில், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் கூட்டணியாகப் போட்டியிடவுள்ளது.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கத்த, வலப்பனை ஆகிய தொகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் பன்வில தொகுதியில் தனித்துக் களமிறங்கவுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அக்கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.