பஸிலின் தந்திரத்தால் மகிந்த அணிக்குள் குழப்பம்!

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பிரிந்துள்ள மகிந்த ராஜபக்ஸவுக்குச் சார்பான கட்சிகள், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தாமரை மொட்டு சின்னத்திலேயே களமிறங்கவுள்ளது.

எனினும், தேர்தலை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை பஸில் ராஜபக்ஸ தன்னிச்சையான முறையில் செய்துவருகிறார் என்றும், பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனைப் பெறாமலேயே வேட்புமனு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன்பில ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்த மோதலின் வெளிப்பாடாகவே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் தினேஷ் குணவர்தன பங்கேற்றார் எனவும், பதுளை கூட்டத்தை விமல் வீரவன்ச புறக்கணித்தார் எனவும் கூறப்படுகின்றது.

Latest Offers