கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையே முறுகல்! சம்பந்தன் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆசன பங்கீடு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒற்றுமையாக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இன்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தார்கள். இதற்கு பதிலளித்த அவர்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. எவ்வாறாயினும், ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.