மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும்!

Report Print Kamel Kamel in அரசியல்

மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம்(07) நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார்.

வீடுகள் அற்ற மக்களுக்கு எதிர்வரும் மூன்றாண்டுகளில் வீடுகளை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த உள்ளது.

மத்திய தரத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளை பெற்றுக் கொள்ள இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும். இதற்கென தேசிய சேமிப்பு வங்கி 7500 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த வீட்டுத் திட்டத்திற்காக நான்கு அமைச்சுக்கள் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை வழங்க உள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நிதி வழங்கப்படாது இடைநிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சேரி வீடுகளில் குடியிருப்போருக்கு முதல் கட்டமாக 20000 வீடுகள் வழங்கப்பட உள்ளன.

வடக்கு புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 50000 வீடுகள் வழங்கப்பட உள்ளன. மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட மக்களுக்காக 10000 வீடுகள் வழங்கப்பட உள்ளன.

கிராமிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் வீடுகள் நிர்மானிக்கப்பட உள்ளன.

இதேவேளை, மத்திய கொழும்பிற்கு தேசிய பாடசாலையொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.