புதிய கடன் முறைமைகள் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும்!

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய கடன் முறைமைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்றைய தினம்(07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து கடன் திட்டங்களும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஏற்கனவே எடுத்துள்ளார். எந்தவொரு வங்கியிலும் வழங்கப்பட முடியாத மிகக் குறைந்த வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படவுள்ளது.

சாதாரண பொதுமக்கள், சிறு அளவிலான விவசாயிகள், விவசாய அமைப்புக்கள், சிறு நடுத்தர வர்த்தகர்கள், சுயதொழிலில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த இலகுக் கடன் திட்டத்தின் மூலம் நலன்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்தக் கடன்களை வழங்கும் பொறிமுறைமைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.