மைத்திரி– பசில் திடீர்ப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு!

Report Print Samy in அரசியல்

இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தேக்கமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய பேச்சு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்குப் பசில் ராஜபக்ச முயற்சித்து வருகிறார் என்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாலேயே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதிக்கும், அரசியல் எதிரியாகப் பார்க்கப்படும் பசிலுக்கும் இடையே அலைபேசியூடாக இடம்பெற்றுள்ள மேற்படி கலந்துரையாடலானது கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரி மற்றும் மகிந்த அணிகளைச் சங்கமிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வண.மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்த சூழ்நிலையில் மேற்படி அலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமையானது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம், இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுகளின் தேக்க நிலமை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பிலேயே அலைபேசி ஊடாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைவதற்குப் பசில் ராஜபக்சவே பிரதான காரணம் எனக் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள் ளது.

அத்துடன், சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி யின் முக்கிய தூணாக இருந்து சுதந்திரக் கட்சியை மிரட்டும் வகையில் இவரே செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.