மாத்தளை நீதிமன்ற நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிடவில்லை: தலதா அத்துகோரள

Report Print Kamel Kamel in அரசியல்

மாத்தளை நீதிமன்ற கட்டிடத் தொகுதி நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவில்லை என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மாத்தளை நீதிமன்ற கட்டிடத் தொகுதி நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறான உத்தரவு எதனையும் ஜனாதிபதி பிறப்பிக்கவில்லை என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் கடந்த 2ஆம் திகதி மாத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நீதி மன்றக் கட்டிடத் தொகுதி அமைப்பதற்கு மாத்தளை விஜய வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஒரு தொகுதியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதிக்கு நான் அறிவித்துள்ளேன் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயர் நீதிமன்றமொன்று இல்லாத ஒரே மாவட்டம் மாத்தளை மாவட்டமாகும் என நீதி அமைச்சர் கொழும்பு ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.