மகிந்த அணிக்கு தொடரும் நெருக்கடி! மைத்திரி அணிக்கு தாவும் முக்கிய உறுப்பினர்?

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு மைத்திரி அணிக்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக அமைந்துள்ள நிலையில், வெகு விரைவில் மகிந்த அணியின் அந்த உறுப்பினர் ஜனாதிபதியை சந்தித்து ஆதரவு வழங்க உள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீயானி விஜேவிக்கிரம மற்றும் வீரகுமார திசநாயக்க ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான கட்சி தாவல்கள் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியினர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers