மலர் மொட்டு மற்றும் படகு சின்னத்தில் களமிறங்கும் மஹிந்த அணி

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பு, மலர்மொட்டு மற்றும் படகு சின்னத்திலும், சுயாதீனமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு கோரப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி 84 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஏழு உள்ளூராட்சி மன்றங்களுக்கு மஹிந்த தரப்பு படகு சின்னத்தில் போட்டியிட உள்ளது.

அத்துடன், பேருவளை மற்றும் பண்டாரவளை நகரசபைகளுக்கு சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜகட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேச விடுதலை மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு கூட்டணியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது.