சீ.வி.கே.சிவஞானம் மக்களுக்கு கொடுக்கும் முக்கிய அறிவுரை

Report Print Sumi in அரசியல்

ஏதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூன்றாம் நாள் விவாதத்தின் 114ஆவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

அதன்போது, முதலமைச்சர் சரியான நேரத்தில் அவைக்கு வருகை தந்து விட்டார். ஆனால் ஏனைய உறுப்பினர்கள் தாமதமாக அவைக்கு வருகை தந்தனர்.

அத்துடன், நேற்றைய தினம் முதலமைச்சர் உட்பட 15 உறுப்பினர்களே இறுதி நேரத்தில் அமர்வில் இருந்துள்ளார்கள். ஊடகங்கள் தமது அவதானிப்புக்களை சரியான முறையில் செய்கின்றார்கள்.

தேர்தல்களின் போது மக்கள் தவறிழைக்கின்றார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாம். ஜனநாயகத்தின் தூண்களாக உள்ள ஊடகவியலாளர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

முன்னைய காலங்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பலர் இருந்தார்கள். தற்போது மக்கள் பெயர்களைப் பார்த்து வாக்களிக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களும் இருக்கின்றார்கள்.

அவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். சபைக்கென ஒரு நியதி இருக்கின்றது. பொது நலன் சார்ந்து உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.

இவற்றினை மக்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. மக்களுக்கு ஏத்தனை ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய பொது மக்கள் நலன் சார்ந்து யோசித்து இறுதி வரை மக்களுடன் இருக்கக்கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இதேவேளை, இன்று காலை 12 உறுப்பினர்களே அவைக்கு உரிய நேரத்தில் வருகை தந்துள்ளார்கள். ஏனையவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை.

அதுவும், வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருகின்றார்கள். யாழ். மாவட்டத்தில் உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும் அவைத் தலைவர் சாடினார்.

எனவே, சபைக்கு தாமதமாக வரும் உறுப்பினர்களின் பெயரை சொல்லி வெளிப்பத்துவேன். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்தி - சுதந்திரன்