யாழ். மாநகர சபையின் அடுத்த மேயர் நான் இல்லை: சி.வீ.கே.சிவஞானம்

Report Print Rakesh in அரசியல்

யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக எனது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் நான் அதில் போட்டியிட அக்கறை காட்டவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடமாகாண அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளர் தொடர்பில் இதுவரை உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மேயர் வேட்பாளராகப் பலரது பெயர்களும் அடிபடுகின்றன. அதில் ஒருவராக சிவஞானமும் உள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக எனது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதில் நான் அக்கறை காட்டவில்லை.

யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஆர்.ஜெயசேகரம், சிரேஷ்ட ஊடகவியியலாளர் என்.வித்தியாதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ராஜதேவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறில் ஆகியோரின் பெயர்கள்

பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டி ஆர்னோல்ட், ஜெயசேகரம், வித்தியாதரன் ஆகிய மூவருக்கு இடையே அமையலாம். ஆனால், அதில் சரியானதொரு முடிவை எடுக்காமல் போனால் ஒருவேளை சென்ற மாநகர சபைத் தேர்தலில் ஏற்பட்ட நிலையும் ஏற்படலாம்" என்றார்.

Latest Offers