ரெலோ போட்டியிடாது: தமிழரசுக் கட்சியின் முடிவால் அதிருப்தி

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால் வவுனியா நகரசபையில் ரெலோ போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகியவற்றில் வவுனியா நகரசபையில் ரெலோ இரு தொகுதிகளில் போட்டியிட கேட்டிருந்தது.

எனினும், அவ்விரு இடங்களில் ஒன்றை தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டுள்ளதுடன், மற்றைய இடத்தை புளொட் அமைப்புக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாக ரெலோ அமைப்பு அதிருப்தியடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபைக்கு ரெலோ போட்டியிடாது எனவும் ஏனைய சபைகளுக்கே போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளது.