கிராமங்களை அபிவிருத்தி செய்ய ஐ.தே.கட்சி உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் நியாயமான தேர்தலை நடத்தும் எனவும் கடந்த காலத்தில் நாட்டில் இருந்த நிலைமையை கவனத்திற்கொண்டு நியாயமான தேர்தலுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, மாலிம்பட, ஹக்மன பிரதேச சபைகள் மற்றும் வெலிகம நகர சபை ஆகியவற்றுக்கு வேட்புமனுக்களை வழங்கும் மற்றும் பிட்டபெத்தர, கொடபொல ஆகிய பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் பொருளாதார நிலைமையை சிறந்த நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கிராமங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர , நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண உட்பட ஐக்கிய தேசியக்கட்சியினர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.