ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மகரகமை நகரசபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரியாக உள்ளடக்கப்படவில்லை என்ற காரணத்தினால், இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெய்யத்தகண்டிய பரதேசசபைக்கு தாக்கல் செய்த வேட்பாளர் பட்டியலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதிகாரம் உள்ள பிரதிநிதி அன்றி வேறு ஒருவர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெலிகமை நகர சபைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாணந்துறை, அகலவத்தை பிரதேசசபைகளுக்கு பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.