மைத்திரி மீது குற்றம் சுமத்தும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற சில தினங்கள் இருக்கும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கையை வெளியிட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்களை நீக்கியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நாட்டின் அரசியல் அதிகாரத்தை மாற்றும் தேர்தல் அல்ல.

மக்கள் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் வாக்களிக்க கிடைத்துள்ள முதல் சந்தர்ப்பம் என்பதால் இந்த தேர்தல் முக்கியமானதாக மாறியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரங்களை பலவீனப்படுத்தி, ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெற செய்தார்.

தேர்தலுக்கு சில தினங்கள் இருக்கும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.

அகப்பை ஜனாதிபதியிடம் இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் தோற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும் என்ற செய்தி இதன் மூலம் முழு நாட்டுக்கும் அனுப்பப்பட்டது.

இவ்விதமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர் அன்று ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெற செய்தார்.

இதன் காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சி தற்போது வேறு சின்னத்தில் தனியான கூட்டணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்கிறது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களுக்கு அரசியல் மாற்று ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers