மைத்திரி அணிக்கு தாவப் போகும் கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பி

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் அடுத்த சில தினங்களில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து அண்மையில் அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers