கூட்டு எதிர்க்கட்சியினர் சிலர் அரசாங்கத்தில் இணையலாம்: உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலவீனமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பணத்திற்காக அரசாங்கத்தில் இணைந்து கொள்ளக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விலகி செல்லும் சிலரை தவிர ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,

தாம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இரவு முழுவதும் வேட்புமனுக்களை தயார் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்தி - அஜித்