பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கும் மஹிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பமாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஏனைய சகல காரணங்களையும் புறந்தள்ளி வைத்து விட்டு, நாடு குறித்து சிந்தித்து வாக்குகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்திக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.