பாதுகாப்பு அச்சுறுத்தல்! இலங்கையிடம் இந்தியா விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இந்தியாவின் பாதுகாப்பு விடயங்களை இலங்கை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பிராந்தியத்தின் அபிவிருத்திகள் மற்றும் மாற்றங்களின் போது பாதுகாப்பு நிலைமை மற்றும் உணர்வுமிக்க விடயங்களில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ராவீஸ் குமார் கோரியுள்ளார்

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு கையளிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான இலங்கையின் உறவு அந்த நாட்டின் சொந்தவிடயம். எனினும், இந்தியாவை பொறுத்தவரையில் அது எந்த ஒரு மூன்றாம் நாட்டின் உறவிலும் தங்கியிருக்கவில்லை என்று ராவீஸ் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers