குட்டிச்சமருக்கான பரப்புரை வியூகம்! மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பிரசாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நாளை கொழும்பில் கூடவுள்ளனர்.

மஹிந்த தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களின் எண்ணிக்கை, அதற்கான ஏற்பாடுகள், கிராம மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் எதை மையப்படுத்தி பரப்புரையை முன்னெடுப்பது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கவுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், மஹிந்த பக்கமுள்ள முக்கிய உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.