ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களியுங்கள்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

Report Print Kumar in அரசியல்

சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி சபைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றும் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது ஆதரவாளர்களுடன் வருகைத்தந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலின் போது ஏறாவூர் நகரசபையில் அதிகளவான ஆசனங்களைப்பெறுவதன் ஊடாக அப்பகுதிக்கு சிறந்த எதிர்காலத்தினை ஏற்படுத்தமுடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்கள் முழுமையாக அபிவிருத்திசெய்யப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கென பல வேலைத்திட்டங்களை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் கட்சியில் உள்ள உறுப்பினர்களை தெரிவுசெய்வதன் மூலமே இப்பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்யமுடியும்.

இந்நிலையில், சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers