எவ்வித சந்தேகமும் கிடையாது! இராஜாங்க அமைச்சரின் நம்பிக்கை

Report Print Murali Murali in அரசியல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் ஈடுபடுவதற்கு அதிகளவான பெண்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. நாட்டில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும், கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முடியாத நிலையே காணப்பட்டது.

அந்த வகையில், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்வர வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியில் கொண்டு வரமுடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers