தேர்தல் காலத்தில் பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தல் காலத்தில் பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சார நோக்கில் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் ஏதேனும் வழங்கப்படவிருந்தால் அதனை அரசியல் தலையீடு இன்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,

தேர்தல் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் பாதிக்கப்படும் வகையில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனவும்,

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் மற்றும் வழிகாட்டல்களை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.