நாமலிடம் ஆலோசனை பெற நான் குழந்தை அல்ல: மஹிந்த காட்டம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கூட்டு எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையிலான கலந்துரையாடல் வெற்றி பெறாமைக்கு யாருடைய அழுத்தமும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்கள் உறுப்பினர் குழுக்கள் பெரும்பான்மையினரின் தீர்மானம் காரணமாகவே கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்தவிடம் கேள்வியெழுப்பிய போது, “1967ஆம் ஆண்டு முதல் அரசியல் செய்யும் தனக்கு நாமலிடம் ஆலோசனை பெறுவதற்கு தான் அரசியல் குழந்தை அல்ல” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் இரண்டு கட்சியும் இணைந்து பிரதேச சபை அதிகாரத்தை அமைப்பதற்கு எடுத்துள்ள யோசனை, தான் தீர்மானித்த ஒன்று அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது குழுவிடம் உள்ள அதிகாரம் மற்றும் பலத்தை கொண்டு இந்த தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பார்த்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.